×

காங். உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராமநாதபுரம், செப்.29: ராமநாதபுரத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, தமிழ்நாடு கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அன்புச்செழியன், மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கௌசி மகாலிங்கம், நகர் செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இந்த முகாமில் மாவட்ட பொதுச்செயலாளர் சேமனூர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Admission Camp ,
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்