×

புதிய ேவளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரி திமுக, கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை, செப். 29: மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரியும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் திமுக, கூட்டணி கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
*திருமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்க, மதிமுக மாவட்ட செயலாளர் கதிரேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாண்டி, சிபிஐ தாலுகா செயலாளர் சுப்புக்காளை, பாபி மாவட்ட தலைவர் ராஜா, ஆதிதமிழர்பேரவை மாவட்ட செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் திமுக நகர பொறுப்பாளர் முருகன், நிர்வாகிகள் நாகராஜ், செல்வம், ஜாகீர், சிவமுருகன், தங்கேஸ்வரன், மதன்குமார், பாசபிரபு, செந்தில்குமார், தொமுச முத்துராம், வார்டு உறுப்பினர் வடமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*சேடபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகிக்க, அவைத்தலைவர் ரோஸ்கருணாநிதி, துணை செயலாளர்கள் வைப்பாண்டியன், நீலமேகம், செல்லமுத்து, மாவட்ட கவுன்சிலர் திசைகரன், துணைசேர்மன் பூப்பாண்டி முனன்ிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் புதுராஜா, நர்ஸ் தங்கமணி, சிபிஎம் முத்துராணி, செல்லத்துரை, காசிமாயன், அஇபாபி மணிகண்டன், விசி மணி, ஆதித்தமிழர் பேரவை பூப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*பேரையூரில் திமுக நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், டி.கல்லுப்பட்டியில் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாண்டிமுருகன், ஒன்றிய பொறுப்பாளர் ஞானசேகரன், நகரசெயலாளர் முத்துக்கணேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
*மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகிக்க, நகர செயலாளர் முகமது யாசின், வக்கீல்கள் எழிலரசன், ஜெயராமன், சேகர், அகிலன், வேலன், சபாபதி, மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*கருங்காலக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க, நிர்வாகிகள் ராஜராஜன், அப்பாஸ், வீர.தமிழ்செல்வன், பிரபாகர், முருகேசன், மணி, முத்துகிருஷ்ணன், எழில்வேந்தன், மங்கைபாகன், ராஜா, யாஹியாகான், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*பாலமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆதிதிராவிடர் அணி கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சுப்பாராயலு, விசிக  மணிமொழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*அலங்காநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன் தலைமை வகிக்க, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் சங்கீதா, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். இதில் திமுக நிர்வாகி அருண்குமார், கவுன்சிலர்கள் சரவணன், தங்கதுரை, காங்கிரஸ் காந்தி, பாண்டியராஜன், சிபிஐ குமரேசன், விசி சிந்தனை வளவன், அதிவீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*சோழவந்தானில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பேரூர் செயலாளர் முனியாண்டி தலைமை வகிக்க, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், அவைத்தலைவர் வேதநாயகம், பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர் மாவட்ட விவசாய அணி நிர்வாகி முருகன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் துவக்கி வைத்தார். இதில் மதிமுக துரைப்பாண்டி, சிபிஐ ஜோதி ராமலிங்கம், மூர்த்தி, அஇபாபி மாரியப்பன், காங்கிரஸ் முத்துப்பாண்டி, கணேசன், மூர்த்தி, திமுக ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, நிர்வாகிகள் கண்ணன், பெரியகருப்பன், அய்யப்பன், ராஜா, சோழராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, பவுன்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கிருஷ்ணபாண்டி, உசிலை சிவா, காங்கிரஸ் சண்முகநாதன், மகேந்திரன், மதிமுக முருகேசன், பால்பாண்டியன், சிபிஎம் ரவிசந்திரன், பாண்டி, சிபிஐ தினகரன் மோகன், பாபி மலையரசன், முருகேசன், விசிக பழனி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், பெத்தானியாபுத்தில் பாபி கதிரவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.  

*வாடிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் பிரகாஷ் தலைமை வகிக்க, முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி, முன்னாள் மாவட்ட துணை செயலாளார் அயூப்கான், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் குருசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேகர் வாழ்த்துரை வழங்க,. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பால.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் சீனிவாசன், பண்ணை செல்வம், முருகன், முரளி, ராகுல்சர்வேஷ், அரவிந்தன், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சமயநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொதும்பு தனசேகர் தலைமை வகிக்க, கிளை செயலாளர் வீரக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தனர்.
*உசிலம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர செயலாளர் தங்கமலை பாண்டி தலைமை வகிக்க, ஒன்றிய இளைஞரணி சந்திரன், சரவணன், காங்கிரஸ் நிர்வாகி மகேந்திரன், சிபிஎம் செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். உத்தப்பநாயக்கனூரில் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில், வழக்கறிஞர் அணி சேதுராமன், எழுமலையில் திமுக நகர செயலாளர் ஜெயராமன் தலைமையில் கட்டாரி பாண்டி உளிட்டோர் பங்கற்றனர்.

Tags : DMK ,demonstration ,allies ,withdrawal ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்