×

குறைதீர் கூட்டம் நடக்காவிட்டாலும் மதுரை கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க குவியும் மக்கள்

மதுரை, செப். 29: கொரோனா தடுப்பு ஊரடங்கால் கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் கடந்த 6 மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள், தங்களது பிரச்னைகளை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். ஆனால் இதை மீறி வாரம்தோறும், திங்கட்கிழமையில் பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் கூடி விடுகின்றனர். நேற்றும் நூற்றுக்கணக்கானோர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அலுவலக வாசலில் வைத்துள்ள பெட்டியில் மனுக்களை போடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி பலர் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றாலும், சிலர் கலெக்டரிடம் நேரில் கொடுக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் ஏற்க மறுத்து, பெட்டியில் மனுவை போடும்படி கண்டிப்பாக கூறினர்.  அரசியல்கட்சிகள், அமைப்பு ரீதியாக போராட்டம் நடத்தி மனு கொடுக்க வருவோரை மட்டும் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.

Tags : Office ,Madurai Collector ,meeting ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...