பேரூராட்சி அலுவலகம் 3வது முறையாக மூடல் போளூரில் 2 ஊழியர்களுக்கு கொரோனா

போளூர், செப்.26: போளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள், துப்புரவு  ஊழியர்கள் என 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் 3 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால் 2வது முறையாக அலுவலகம் மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும் 2 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அலுவலகம் 3வது முறையாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories:

>