×

தெற்கு வள்ளியூர் ரேஷன் கடையில் முகக்கவசம் வழங்கல்

பணகுடி, செப்.26: தெற்கு வள்ளியூரில் உள்ள ரேஷன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் வட்டார வழங்கல் அலுவலர் பழனி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, வள்ளியூர் கூட்டுறவு சொசைட்டி தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் தங்கவேலு, செல்லப்பாண்டியன், அருண்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.Tags : South Valliyoor Ration Store ,
× RELATED தடுப்பூசி விநியோகம் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி