×

மணல் கடத்தல் கும்பல் மிரட்டியதால் மானூரில் விஷம் குடித்த விவசாயி

நெல்லை, செப். 26: நெல்லை அருகே மணல் கடத்தல் கும்பல் மிரட்டியதால் விவசாயி விஷம் குடித்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மானூர் அருகே உள்ள சுப்பையாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). விவசாயியான இவர், வீட்டில் திடீரென விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அவரது மகன் கலைச்செல்வம் (26), மாவட்ட எஸ்பியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் சுப்பையாபுரத்தில் விவசாயம் செய்து நாங்கள் பிழைத்து வருகிறோம். மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் எங்கள் ஊரைச் சேர்ந்த சிலருடன் எங்களுக்கு முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 22ம் தேதி நான், எனது தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை அடித்து உதைத்து அவதூறாக பேசி தாக்கி விட்டுச் சென்றனர். இதுகுறித்து நாங்கள் மானூர் போலீசில் புகார் செய்ேதாம். ஆனால் போலீசார், புகார் கொடுக்க வந்த எங்களையே தாக்கினர். இதனால் அவமானமடைந்த எனது தந்தை முருகன், விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Manor ,sand smuggling gang ,
× RELATED திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய...