×

கோவில்பட்டி பகுதியில் நகரும் நியாய விலைக்கடை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, செப்.26:  கோவில்பட்டி பகுதியில் நகரும் நியாயவிலை கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். கோவில்பட்டி அருகே உள்ள மேலப்பாண்டவர்மங்கலம், சத்திரப்பட்டி, வடக்கு சுப்பிரமணியபுரம், லக்கம்மாதேவிபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று அம்மா நகரும் நியாயவிலைக்கடை மூலம் பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், முன்னாள் எம்எல்ஏ மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைச் சேர்மன் பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், போடுசாமி, கருப்பசாமி, வினோபாஜி, கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் ராமச்சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், பிடிஓக்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஆர்டிஓ விஜயா, விநாயகா முருகன், ஆபிகாரம் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kadambur Raju ,price shop ,area ,Kovilpatti ,
× RELATED அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில்...