கன்னியாகுமரி லாட்ஜுக்கு வரவழைத்து காபியில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

நாகர்கோவில், செப்.26: மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது : திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த சஜூ (50) என்பவருக்கும், எனது தாயாருக்கும் கள்ளக்காதல் உண்டு. இருவரும் தற்போது சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து மீன் லோடு எடுத்து களியக்காவிளை, திருவனந்தபுரம் பகுதியில் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்கு வருவது உண்டு. சம்பவத்தன்று எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் கன்னியாகுமரி வருமாறு அழைத்தார். அதன்படி நான், எனது சகோதரி மற்றும் மைத்துனியும், குழந்தைகளுடன் கன்னியாகுமரி வந்தோம். ஒரு லாட்ஜுக்கு எங்களை அழைத்து சென்றனர்.அந்த லாட்ஜுக்கு சென்றவுடன் குழந்தைகளை எனது தாயார் வெளியே அழைத்து சென்றார். அப்போது சஜூ எனக்கு குடிப்பதற்கு காபி கொடுத்தார். சிறிது நேரத்தில் நான் மயங்கினேன். மயக்க நிலையில் இருந்த என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். திடீரென எனக்கு உணர்வு வந்து நான் கூச்சலிட்டதும், வெளியே ஓடி விட்டார். அங்கிருந்து தப்பிய பின்னர், நான் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் போது என்னை சஜூவும், எனது தாயாரும் மிரட்டினர். இவ்வாறு கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி சஜூ மற்றும் இளம்பெண்ணின் தாயார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

Related Stories:

>