பைக் மோதி மீனவர் பலி

குளச்சல்,செப்.26: மணக்குடியை சேர்ந்தவர் ஜாண் கென்னடி (56).மீனவர்.நேற்று  முன்தினம் மாலை இவர் மண்டைக்காடு ஏ.வி.எம்.கால்வாய் சந்திப்பில்  நடந்து  சென்று  கொண்டிருந்தார்.புதூர் சமூக நலக்கூடம் அருகில் சாலையோரம் செல்லும்போது அடையாளம் தெரியாத பைக் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல்  சென்று விட்டது.படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம்  மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜா ண் கென்னடி இறந்தார்.  மண்டைக்காடு  போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>