×

மூதாட்டியிடம் நூதன முறையில் 8 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

வானூர், செப். 26: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராணி(58). இவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தாங்கள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அந்த நிறுவனத்தின் மூலம் தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதால் அதனை அளிக்க வந்துள்ளதாகவும், அதற்காக போட்டோ எடுக்க வேண்டும் என்றும் விஜயராணியிடம் கூறியுள்ளனர். அதற்கு மூதாட்டி சம்மதம் தெரிவித்ததும் பரிசு பெற தங்க நகைகள் போட்டிருக்க கூடாது, எனவே, அதனை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளனர். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை கழட்டி வைத்தவுடன் போட்டோ எடுத்துள்ளனர். மேலும் தங்கள் கணவருடைய பாஸ்போர்ட் போட்டோ வேண்டும். அதனை எடுத்து வாங்கள் என்று கூறியுள்ளனர்.

அப்போது அவர் உள்ளே சென்று போட்டோ எடுத்து வருவதற்குள் அந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பினர். நகையை எடுத்துக்கொண்டு செல்வதை பார்த்த விஜயராணி கூச்சலிட்டுக்கொண்டு ஓடியுள்ளார். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.இந்த சம்பவம் குறித்து விஜயராணி ஆரோவில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : assassins ,
× RELATED வீட்டில் நகை திருட்டு