×

ஊட்டியில் கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது

ஊட்டி,செப்.26: ஊட்டி நகரில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். செவ்வாய், புதன்கிழமைகளில் மழை குறைந்து வெயிலான காலநிலை நிலவியது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மேகமூட்டமான காலநிலை நிலவி வந்த நிலையில், சுமார் 12 மணிக்கு பிறகு கனமழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக ஊட்டி நகரில் கனமழை பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மார்க்கெட் வளாகம், கூட்ஷெட் பகுதி, சேரிங்கிராஸ் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக குளிரான காலநிலை நிலவியது.இதனிடையே காற்று காரணமாக நேற்று காலை ஊட்டி புதுமந்து ஆடாசோலை அருேக சாலையின் குறுக்கே ராட்சத கற்பூர மரம் முறிந்து விழுந்தது. இதனால் இச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துைறயினர் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர்.

Tags : Ooty ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்