×

இணையதள வழியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஊட்டி,செப்.26: ஊட்டி நகர திமுக., சார்பில் நடந்த ஆன்லைன் வழியில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. உடனுக்குடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. ‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணைய வழியில் திமுக.,வில் உறுப்பினராக சேர்வதற்கான திட்டத்தை திமுக., தலைவர் ஸ்டாலின் கடந்த 15ம் தேதி துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனிடையே ஊட்டி நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊட்டி நகர திமுக., அலுவலகத்தில் நடந்தது. இதில் ஊட்டி தலையாட்டிமந்து உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சமூக இடைவெளியை பின்பற்றி திமுக.,வில் உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து உறுப்பினராக இணைந்தவர்களுக்கு ஊட்டி நகர திமுக., அலுவலகத்தில் நடந்தது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்து, எல்லோரும் நம்முடன் என்ற இணையவழியில் உறுப்பினரான இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், மஞ்சுகுமார், ஆசிரியர் பெரியசாமி, செல்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,membership camp ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்