×

தலையாட்டிமந்து பகுதியில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி,செப்.26: ஊட்டி - குன்னூர் சாலையில் தலையாட்டிமந்து பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சமவெளி பகுதிகளான கோவை, மேட்டுபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையாக ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பிரதான சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இச்சாலையில் தலையாட்டிமந்து முதல் ஊட்டி ஆர்டிஒ., அலுவலகம் வரையுள்ள சுமார் 1 கி.மீ., தூரம் சாலையில் நீர்வளம் உள்ள பகுதி என்பதால் தார் சாலை சேதமடைந்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இன்டர்லாக் கற்கள் அமைக்கப்பட்டது.அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்டர்லாக் கற்கள் சேதமடைந்து காணப்பட்டன. இதேபோல் தலையாட்டிமந்து பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இன்டர்லாக் கற்கள் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டனர்.

Tags : Commencement ,area ,Talayattimandu ,
× RELATED வேளாண் விரிவாக்க மைய கட்டுமான பணி துவக்கம்