×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவள்ளூர்: திமுக உறுப்பினர் சேர்க்கை   இணையதளம் வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்படி திருவள்ளூர் நகரம் 23வது வார்டு  திமுக சார்பில் நகர பிரதிநிதி கே.வீனஸ் ஏற்பாட்டில் இணையதளம் வாயிலாக திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமில் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் புதியதாக திமுக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டையினை  வழங்கினார். இந்த முகாமில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,  நிர்வாகிகள் டி.தேவன், ராஜேஷ்வரி கைலாசம், கோவி.மனோகரன், ஸ்டாலின்,  மகாலிங்கம், எஸ்.பாபு, மணிவண்ணன், வி.சங்கர், ஏ.அமர்நாத், விஜி, சசிகுமார், ஜெபக்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Admission Camp ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்