குடோனில் தீவிபத்து

அம்பத்தூர்: சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரத்தில்  பழைய பிளாஸ்டிக் கு

டோன் நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை  ஊற்றி தீயை  அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

 தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம், செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து,  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>