×

மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை மாயம் ஐகோர்ட் உத்தரவில் போலீசார் வழக்கு

சின்னமனூர், செப்.25: சின்னமனூரில் உள்ள சொசைட்டி தெருவைச் சேர்ந்த ரவி, காமாட்சிபுரம் துணைமின்நிலைய மின்ஆய்வாளர். இவரது மனைவி தாமரைச்செல்வி, பதினொன்றரை பவுன் நகையை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார். கடந்த ஆக.20ல் பீரோவில் இருந்த நகை பெட்டியை எடுத்து மெத்தையில் வைத்தவர் மறதியாக வெளியே சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது, நகைப்பெட்டியை காணவில்லை. இது குறித்து சின்னமனூர் போலீசில் தாமரைச்செல்வி புகார் அளித்தார். ஆனால், போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில், வழக்குப் பதியாமல் புகாரை ஏற்க மறுத்தனர். இது குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில், தாமரைச்செல்வி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நகை மாய மானது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டார். இதன்பேரில் சின்னமனூர் சப்இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Electrical Officer ,
× RELATED ஜார்கண்ட்டில் வீட்டில் வளர்க்கப்பட்ட...