×

108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

திருப்புவனம், செப்.25:  மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையிலுள்ள திருப்பாச்சேத்தியை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாகி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல 15 கி.மீ. தூரம் உள்ள மானாமதுரை அல்லது 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டியுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க திருப்பாச்சேத்தியில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பாச்சேத்தியில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. கலெக்டர் ஜெயக்காந்தன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கொடியசைத்து 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். இதில் மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, 108 சேவை மேலாளர் ரஞ்சித், ஒருங்கிணைப்பாளர் செளந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ambulance service launch ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்