×

ஊராட்சி நிதியில் மோசடி கிராமமக்கள் புகார்

திருப்புத்தூர், செப்.25:  திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் ப.கருங்குளம் ஊராட்சியில், நிதி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர். ப.கருங்குளம் கிராம மக்கள் சார்பில், திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியிடம் கொடுத்த மனுவில்: ஊராட்சி நிதிகளில் கையாடல் நடந்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைக்கு வராத வயதானவர்களை சேர்த்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் பசுமை வீடு திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ரேஷன் பொருட்கள் வாங்காமல்...