×

தூசி பறக்கும் சாலையால் அவதி பாதாளசாக்கடை பணி விரைவு பெறுமா?

காரைக்குடி, செப்.25:  காரைக்குடி நகராட்சி பகுதிகளில் 112 கோடியே 53 லட்சத்தில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. தற்போது கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திடமிடப்பட்டுள்ளது. இதன்படி சாலைகளில் குழி வெட்டும் பணி நடந்து வருகிறது. செக்காலை ரோடு, செஞ்சை உள்பட பல்வேறு பகுதிகளில் பணிகள் நடக்கிறது. பைப் பதிக்க மற்றும் தொட்டி அமைக்க தார்சாலைகள் வெட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் மண் சாலையாக மாறி தூசி பறந்து சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

வணிக நிறுவனங்கள் நிறைந்த முக்கிய சாலையில் பணிகளை விரைந்து முடித்து தார்சாலை அமைக்காமல் ஆமைவேகத்தில் பணிகளை பார்ப்பதால் பொருட்கள் முழுவதும் தூசிபடர்ந்து காணப்படுகிறது. சமூக ஆர்வலர் நந்தகுமார் கூறுகையில், பாதாளசாக்கடை பணிக்கு என பள்ளம் தோண்டி, தொட்டி அமைத்தும் அதனை சுற்றி உள்ள மண்ணை அகற்றாமல் அப்படியே போட்டு உள்ளனர். இதனால் நடக்ககூட முடியாத நிலை உள்ளது. பல்வேறு பகுதிகள் மண்மேடாக உள்ளதால் கடும் தூசி பறக்கிறது. ஒவ்வொரு பகுதியாக முடித்து சாலை அமைத்த பின்னரே அடுத்த பகுதியில் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் பள்ளம் தோண்டி போட்டுள்ளனர். தூசி பறக்காமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்,அதனையும் செய்வது கிடையாது என்றார்.

Tags : Avadi ,road ,
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்