×

விவசாயிகளுக்கு பயிற்சி

சாயல்குடி. செப்.25:  கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொதிகுளம் மற்றும் தனிச்சியம் கிராமத்தில் மகளிர் உணவு பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். இதில் கால்நடை துறை சார்பில் கால்நடை மேலாண்மை, கறவை மாடு மற்றும் ஆடுகளுக்கு குடல் புழு நீக்க மருந்து அளிப்பது, மலட்டு தன்மை தடுப்பு முறைகள் மற்றும் பால் உற்பத்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED மனஅழுத்தம் போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி