×

கொடைக்கானல் ஏரியில் படகு ஓட்டுனர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி

கொடைக்கானல், செப். 25: கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 படகு குழாம்கள் உள்ளன. இங்கு படகு ஓட்டுனர்கள் 40 பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக படகிலிருந்து சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்தால் எப்படி காப்பாற்றுவது, பாதுகாப்பான முறையில் படகுகளை எப்படி இயக்குவது உள்ளிட்ட செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சியினை  இன்ஸ்டிடியூட் ஆப் நாடிக்கல் சயின்ஸ் அண்ட் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளர் டாம் ஜோசப், தொழில்நுட்ப இயக்குனர் வினோத்குமார் அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் சுற்றுலா வளர்ச்சி கழக படகு இல்லங்களில் உள்ள படகு ஓட்டுனர்களுக்கு லைப் சேவிங் டெக்னிக்ஸ், சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஊட்டி, பிச்சாவரம், முதலியார்குப்பம், முட்டுக்காடு, ஏற்காடு முடிந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் படகு ஓட்டுனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றனர். ஏற்பாடுகளை கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் பூபாலன் செய்திருந்தார்.

Tags : boatmen ,Kodaikanal Lake ,
× RELATED கொடைக்கானலில் நவீன இயந்திரம் மூலம் ஏரியில் தூய்மை பணி