வாழப்பாடியில் திமுக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

வாழப்பாடி, செப்.25: வாழப்பாடியில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், ஆதரித்து செயல்படும் அதிமுக அரசை கண்டித்தும் வரும் 28ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தநாரி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தங்கவேல், கொமதேக மாவட்ட செயலாளர் ரமேஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாலாஜி, மனோகரன், கோபால்ராஜ், வேல்முருகன், சுரேஷ், ரஷ்சியா ரவி, முத்து, கருணாநிதி, பழனிமுருகன், அன்பழகன், சக்ரவர்த்தி, செல்வம் மற்றும் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: