×

ஓசூரில் திமுக, கூட்டணி கட்சியினர் ஆலோசனை

ஓசூர், செப்.25: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக தலைமையிலான, மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வருகிற 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர் முரளிதரன், திக வனவேந்தன், கொமதேக செல்வராஜ், சிபிஎம் ஜெயராமன், மமக யேஜாஸ், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி காதர் சையத் இலியாஸ், தவாக சபரி, வி.சி.கிருஷ்ணன், எஸ்டிபிஐ ஷானவாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,alliance parties ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்