×

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரத முயற்சி ஆர்டிஓ பேச்சுவார்த்தை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, செப்.25: திருவண்ணாமலையில் நேற்று, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவண்ணாமலை பெரியார் சிலை சந்திப்பு அருகே நேற்று, தலித் விடுதலை இயக்கம் சார்பில் அருத்ததியர் குடியிருப்பு பகுதிகளில் சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்ேகாரி தொடர் உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆர்டிஓ தேவி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தலித் விடுதலை முன்னணி நிர்வாகிகள் மற்றும் திமுக நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்கரிப்பூர், ஏர்பாக்கம், வெண்ணியேந்தல், திருவண்ணாமலை நகராட்சியில் அம்பேத்கர் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, வடஆண்டாப்பட்டு, செங்கம் தாலுகா பெரிய பாலியப்பட்டு, முன்னூர்மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தனிநபர் கோரிக்கை மனுக்கள் மீது, உரிய விசாரணை நடத்தி பழங்குடியினர் நலத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தேவி உறுதியளித்தார். எனவே, தொடர் உண்ணாவிரத போராட்ட முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags : talks ,RTO ,hunger strike ,Thiruvannamalai ,
× RELATED தயாரிப்பாளர்கள், திரையரங்க...