×

பணம் பறிமுதல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை

வேலூர், செப்.25: தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீரென விசாரணை நடத்திய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஆண்டு நடந்த வேலூர் மக்களவை தேர்தலின்போது, காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம், சிபிஐ இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையில் நடந்தது. இந்த சம்பவம் காட்பாடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காட்பாடியில் மக்களவை தேர்தல் நேரத்தில் காட்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரையில் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது’ என்றார்கள்.

Tags : CBI ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...