மாப்பிள்ளையூரணியில் திமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி, செப். 25:  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்தும், தொழிற்சங்க கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களின் சார்பில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் வக்கீல்ஜோதிராஜா தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில், திமுக மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர்சுப்பிரமணியன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணைத்தலைவர் கோயில்மணி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அந்தோனி தனுசுபாலன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அம்பாசங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் பிலோமின்ராஜ், ரங்கசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பார்வதி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சேசுராஜ், தங்கப்பாண்டி, சி.ஐ.டி.யு தொழிற்சங்க சங்கரன், காசி மற்றும் திமுக சார்பில் ரவி, காமராஜ், ஜெபராஜ், நெல்சன், முருகன், வெற்றிவேல், ஜோஸ்பின்மேரி, ஆரோக்யமேரி, அங்காளபரமேஸ்வரி, ஜெசிந்தா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>