×

ரயில்வேயில் தனியார்மயத்தை கைவிடக் கோரி எஸ்சி, எஸ்டி ெதாழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை, செப். 25:  ரயில்வேயில் தனியார்மயத்தைக் கைவிடக்கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டுக்கு எதிரான ரயில்வே தனியார்மயத்தை கைவிட வேண்டும். ரயில்வேயை தனியார்மயமாக்குவது மற்றும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாக ைகவிட வேண்டும். ரயில்வே காலிப்பணி
யிடங்களில் 50 சதவீதத்தை நீக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறையில் வழங்கிட வேண்டும். 2012ல் நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்ட 117வது அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் (2012 முதல் நிலுவையில் உள்ளது) இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இந்திய ரயில்வேயில் அனைத்து துறைகளிலும் எஸ்சி, எஸ்டிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களை சரண்டர் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தின் நெல்லை கிளைச் செயலாளர் மதியழகன் தலைமை வகித்துப் பேசினார். நெல்லை கிளைத் தலைவர் முருகன், மதுரை கோட்ட லோகோ பைலட் பிரிவு பொறுப்பாளர் தினகரன், மதுரை கோட்ட அலுவலக செயலாளர் அய்யனார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நெல்லை நிலைய கண்காணிப்பாளர் மணி மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் பிஎஸ்என்எல் எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜய், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், மத்திய மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்க நிர்வாகிகள் அரிராம், முத்துசாமி, சுந்தரம், மாரிச்செல்வம், கருப்பசாமி, புதிய செல்வம், பலவேச குமார், சுரேஸ்குமார் உட்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags : SC ,unions ,ST ,railways ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...