×

அதிகப்படியாக திறப்பு தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில், செப். 25: காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமத்துக்கு, வடக்குராஜன் வாய்க்கால் பாசனம் ஆதாரம் ஆகும். ஓமாம்புலியூர் பகுதி வடக்கு ராஜனில் இருந்து பிரிந்து வரும் உடையூரான் பாசன வாய்க்கால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன ஆதாரம் ஆகும். இந்நிலையில், மேல் மடையான முட்டம் பகுதியில் சம்பந்தப்பட்ட வாய்க்கால் முறையாக தூர்வாரி கரைகள் உயர்த்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வடக்கு ராஜனில் 600 கனஅடி தண்ணீர் செல்வதால் மேற்கண்ட முட்டம் பகுதியில் சுமார் 12 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. தற்போது வாய்க்காலும், விளைநிலத்தில் உள்ள நீர் மட்டமும் சமநிலையில் இருப்பதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், அடுத்த 2 நாட்களுக்கு உடையூரான் வாய்க்காலில் தண்ணீரை குறைக்க வேண்டும்.தண்ணீர் வடிந்தபின், குறிப்பிட்ட பகுதி வாய்க்கால் கரைகளை உயர்த்திய பிறகு கடைமடைக்கு செல்லுமாறு முழு கொள்ளளவை திறக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர்...