×

பெண் காவலர்கள் மீது எஸ்.பி யிடம் மாமியார் புகார்

நாகர்கோவில், செப்.25: நுள்ளிவிளை காரங்காட்டை சேர்ந்த  மேரி என்பவர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் ததேயுவிற்கும் நாகர்கோவில்  ஆயதப்படை பிரிவில் பணியாற்றும் மேரிசுஜிக்கும்  கடந்த 22.12.2015 அன்று திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. எனதுமகன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாதம் ஒரு முறை வந்து மனைவி குழந்தைகளை பார்த்து செல்வார். ஒரு வருடத்தில் மேரிசுஜி  நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வரும் அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். எனது மகன் அழைத்தும் வரவில்லை.

இதனால் எங்கள் பங்குதந்தை மூலம் பேசினோம். பதில் இல்லை. நாங்கள் போலீஸ் என மிரட்டல் விடுத்தார்கள். எனவே தக்கலை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்நிலையில், நாகர்கோவிலில் எஸ்.பி மூலம் புகார் அளித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நானும் எனது மகனும் இரண்டு லட்சம் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கூட்டு சதித்திட்டமாகும். மிரட்டல் விடுத்த  இரு பெண் போலீசாரை இடமாற்றம் செய்வதுடன் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : mother-in-law ,guards ,SP ,
× RELATED சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு...