×

குமரியில் தொடர் மழை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

நாகர்கோவில், செப்.25: குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தநிலையில் பின்னர் இது பலத்த மழையாக மாறியது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. நேற்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்தியது. நேற்று காலை வரை முள்ளங்கினாவிளையில் 12 மீ.மீ, குளச்சலில் 3.6, சிற்றார்-1ல் 3.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 34.60 அடியாக இருந்தது. அணைக்கு 1064 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.30 அடியாகும். அணைக்கு 1785 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 386 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

சிற்றார்-1ல் 12.30 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 112 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-2ல் 12.40 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 178 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பொய்கையில் 9.60 அடி நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை 54.12 அடி நீர்மட்டத்துடன் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. வினாடிக்கு 34 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 19.8 அடியாகும். அணைக்கு 6 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகா பகுதியில் ஒரு வீடும் என்று மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து