×

அரசின் வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை

கோவை, செப். 25:  கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது: பொது இடங்களில் எச்சில் துப்புதல், தனிநபர் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.  
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புபவருக்கு ரூ.500, தனிநபர் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராத தொகையினை வசூலித்திட ஒவ்வொரு துறையிலும் அலுவலரை நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்