×

மேலூர் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி பெண்ணிடம் திருட்டு

மேலூர், ஆக. 22:  மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வீரணன் மனைவி மகமாயி(52). இவர் தெற்குதெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் தனக்கு பணம் எடுத்து தரும்படி தனது கார்டை கொடுத்து, பின் நம்பரை கூறி உள்ளார். அந்த வாலிபர் இயந்திரத்தில் கார்டை நுழைப்பது போல் நடித்து, பணம் வரவில்லை என கூறிவிட்டு, கார்ட்டை மகமாயிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்ததாக மகமாயி செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சந்தேகமடைந்த அவர் தெற்குதெருவில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து பணம் எடுத்தது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் மகமாயியிடமிருந்து பெற்ற ஏடிஎம் கார்ட்டை அவர் வைத்து கொண்டு, போலி ஏடிஎம் கார்ட்டை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Robbery ,Melur ,
× RELATED வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை