தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் திருப்பூரில் போலீஸ் குவிப்பு

திருப்பூர்,ஆக.22: கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழாவை சாலையோரங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடுவதை தவிர்த்து தங்கள் வீடுகளில் கொண்டாடுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட வேண்டாம் என்ற அறிவிப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரோடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம்போல் நடைபெறும் என இந்து அமைப்புகளின் தலைவர்களின் அறிக்கை விடுத்துள்ளனர். எனவே விநாயகர் சதுர்த்தியன்று அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக திருப்பூரில் ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருப்பூரின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வஜ்ரா நிறுத்தி வைப்பு: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம், மாநகர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதை தொடர்ந்து கலவரங்களின்போது கூட்டத்தை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படும் வாகனமான வஜ்ரா வாகனத்தை புஸ்பா தியேட்டர் சந்திப்பில் நிறுத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் அனைத்து போலீசாரும் கட்டாயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>