நீதிமன்ற உத்தரவை ஏற்று வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட பொதுமக்கள் முடிவு

திருப்பூர்,ஆக.22: திருப்பூரில் அரசின் உத்தரவை ஏற்று வீட்டிலிருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து திருப்பூர் பூந்தோட்டத்தை சேர்ந்த கமலவேணி கூறியதாவது: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை பாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கொரோனாவிற்கு பலர் பலியாவதை  தினசரி பார்த்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் வருடாவருடம்  எங்கள் பகுதியில் சிறிய அளவில் விநாயகர் வைத்து வழிபாடு நடத்துவோம். இந்த ஆண்டு அரசு மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்து அவரவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதன் படி இன்று விநாயகருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டைகளை படையலிட்டு விநாயகர் வழிபாடு செய்ய உள்ளோம். இவ்வாறு கூறினர்.

சுந்தரராச அடிகளார் கூறியதாவது: எங்கள் திருமடத்தின் சார்பில் கொரோனா நோய் பரவாத வண்ணம் வீடுகளிலிருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதை முழுமையாக ஏற்கிறோம். மேலும் அரசின் வழிகாட்டுதல்களை புரிந்து, அதனை பின்பற்றி நடத்தால் கொரோனா சிக்கலில் இருந்து விடுபடலாம். முழு முதல் கடவுளான விநாயகர் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்தே விநாயகர் சதுர்த்தி விழாவை தனிமனித இடைவெளியுடன் கொண்டாடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>