பெருந்துறை எம்.எல்.ஏ. இல்ல திருமணம் மணமக்களுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

பெருந்துறை, ஆக.22:பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தின் மகன் திவாகர் சக்திவேலுக்கும், ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மகள் சுவாதிகாவும் வரும் 28ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற உள்ளது.  இதனால், பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தின் இல்லத்திற்கு நேற்று மாலை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், தொழிலதிபர் ஆனந்த் குடும்பத்தினர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>