×

மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்

செய்யூர், மார்ச் 20: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, வீடுகள் மீது, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த  அழுத்த மும்முனை மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இவை, வீட்டின் மாடியில் இருந்து சிறுவர்கள் கைக்கு எட்டும் உயரத்தில் மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதனால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் பொதுக்கள் வசிக்கின்றனர்.
மேலும், இங்குள்ள குடிசை வீடுகள் மீதும் மின் வயர்கள் உரசியவாறு செல்கின்றன. மழைக்காலத்தில் பலத்த காற்று வீசும்போதும் இந்த மீன் உயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி  தீப்பொறிகள் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், தீ விபத்துக்கள் நேரிடும் அபாயமும் உள்ளது. தினம் தினம் அச்சுறுத்திவரும் இந்த மின் கம்பிகள் மற்றும் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பலமுறை, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரைல் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மின் வாரியம் சார்பில் இப்பகுதியில் குடியிருப்புகள் வருவதற்கு முன்பே மின் கம்பங்களும் இணைப்புகளும் வழங்கப்பட்டன. தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளையும், கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம். அதற்கு, எங்களால் எதுவும் செய்ய முடியாது. குடியிருப்புவாசிகள், அவர்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது உள்ள எம்எல்ஏ, எம்பி ஆகியோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எங்களது நிலை நன்றாக தெரியும். இந்த பிரச்னையை போக்க, அவர்களே உதவிக்கரம் நீட்ட வேண்டும். மேலும், அவர்களது ெதாகுதி நிதி ஒதுக்கீட்டில், இந்த பிரச்னையை தீர்த்து வைக்க முன் வர வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றனர்.

மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டு காலமாக இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பலதரப்பட்ட அதிகாரிகளை சந்தித்தோம். ஆனால், யாரும் எங்களின் நிலையை கண்டும் காணாமல் உள்ளனர். எங்கள் ஊராட்சியில் தேவையான நிதியும் இல்லை, எங்களிடமும் தேவையான பணமும் இல்லை. எனவே,  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, எங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Tags : homes ,Ariyanoor ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை