×

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு

பெரம்பலூர், மார்ச் 20: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் கிளையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையாக பஸ்ஸ்டாண்டில் கைகழுவி செல்ல வாஷ்பேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம், கிருமி நாசினி, சுக்கு டீ, மிளகு ரசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (டெப்போ) கிளையில் 105 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பணியாளர்கள் 700 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் கிளையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு சம்மந்தமாக தினமும் பெரம்பலூர் கிளையில் பணிபுரிவோருக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு பணியின்போது சுக்கு டீ வழங்கப்படுகிறது. மேலும் மதிய உணவின்போது ரசத்தில் மிளகுகலந்து மிளகு ரசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் உணவகத்தில் கைகழுவும்போது பயன்படுத்த வெந்நீர், மஞ்சள் தூள் கலந்த கிருமி நாசினி கொண்ட மஞ்சள் நீர் மூலம் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிரைவர், கண்டக்டர்களுக்கு தனித்தனியாக சோப்புகள் வழங்கப்பட்டு ஒரே நாளில் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் கிளையை சேர்ந்த அனைத்து பேருந்துகளின் படிகளில் ஏறுமிடத்தில் உள்ள கைப்பிடிகளை ஸ்பிரே கன்மூலம் திரவத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பேருந்து நிலையத்திலும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வாஷ்பேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஒவ்வொரு சிங்கிலுக்கும் கைகளை கழுவி செல்ல டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் கிளை மேலாளர் ஞானமூர்த்தி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியன், வினோத்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : conductors ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது