×

பள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்

கரூர், மார்ச் 20: கரூர் தாந்தோணிமலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தினால் இதனை பயன்படுத்தி வரும் அனைத்து தரப்பினர்களும் அவதியில் உள்ளனர். இதனை சிறப்பாக செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் அருகே பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 10க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட வணிக வளாகமாக இந்த கட்டிடம் உள்ளது. சுய உதவிக்குழுவினர் தங்களின் உற்பத்தி பொருட்களை இங்கு வைத்து விற்பனை செய்யப்படும் நோக்கில் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால், போதிய அடிப்படை வசதிகள் குறைவு காரணமாக இதனை யாரும் பயன்படுத்தாமல் உள்ளனர்.

போதிய கழிப்பறை வசதி இல்லாதது, தண்ணீர் வசதி குறைவாக உள்ளது போன்ற காரணங்களால் இந்த வணிக வளாக கட்டிடம் எந்தவித பயன்பாடும் இன்றி உள்ளதாக கூறப்படுகிறது.ஒரு சில கடைகள் இந்த வளாகத்தில் செயல்பட்டாலும் அவர்களும், தங்கள் பிரச்னைகளுக்கு வெளியே செல்லும் நிலையில்தான் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரும் பட்சத்தில் இந்த வணிக வளாக கடைகள் அனைத்தும் செயல்படும் எனவும், ஆனால் யாரும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் பூமாலை வணிக வளாகத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : building ,library ,school holidays ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி