×

திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருமயம், மார்ச்20: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ராமு தலைமையில் ஒன்றிய குழுவின்சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணை தலைவர் மீனாட்சி சிவகுமார்முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) சங்கர் வரவேற்றார்.கூட்டத்தில் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து கூறினர்.
.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் பழனியப்பன்: குளமங்களம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரில் அளவு மிக குறைந்த அளவு வருவதால் அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீர் அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராம பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சிறு மின் மோட்டார் மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர். சரண்யா சரவணன் பேசுகையில், திருமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா பூங்கா பணிகள் முடிவடையாமல் இருப்பதோடு பணிகள் கைவிடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அப்பகுதிகள் ழுழுவதும் சீமை கருவேல மரங்கள் மண்டி காடு போல் மாறி வருகிறது.

மேலும் திருமயம் குடைவரைகோயில் சுற்றுலா தளத்தை சுற்றி பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள்,தெரு நாய்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது திருமயம் குடியிருப்பு வாசிகளுக்கும் தொல்லை கொடுத்து வருகிறது. எனவே குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு திருமயத்திற்கு தனியாக குப்பை கிடங்கு கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிகாரிகள் கூறுகையில், அம்மா பூங்கா விரைவில் சரி செய்யப்பட்டு ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படும்,குரங்குகள், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,குப்பை கிடங்கிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பீடு நடைபெறுகிறது விரைவில் நிறைவேற்றப்படும் என்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும் அப்பகுதி கவுன்சிலருக்கு,ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு தனி அறை ஓதுக்க வேண்டும் என்ற கோரிக்கை கவுன்சிலர் சார்பில் வைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட துணை வேளாண்மை அலுவலர் முருகன் பேசுகையில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, மோட்டார்,பைப்புகள் அரசு 100 சதவீத மாநியத்தில் வழங்குவதாகவும்,பெரிய விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்தில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை பெற விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார்,வரைபடத்துடன் வந்தால் பாpசீலிணை செய்யப்படும் என்றார்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சிறு தானியம், உளுந்து பயிhpடும் விவசாயிகள் திருமயம் வேளாண்மை அலுவலகத்தில் மானிய விலையில் சிதைகளை பெற்று பயனடைலாம் என கேட்டுக்கொண்டார். கிராமத்தில் குழுவாக செயல்படும் விவசாயிகள் கூட்டுபணி திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான விவசாய உபகரணங்களை விலையில்லாமல் ஊர் பொதுவாக பெற்று கொள்ள முடியும் என்றார்.
கூட்டத்தில் மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிடிஓ வெங்கட பிரபு கேட்டுக்கொண்டார்.

Tags : Union ,committee meeting ,area ,Thirumayam ,
× RELATED அருவிகளில் தண்ணீர் கொட்டியும்...