×

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 20: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டீம் மருத்துவமனையின் சார்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் தலைவர் சலீம் முன்னிலை வகித்தார். பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அனைவருக்கும் விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.

அடிக்கடி சோப் போட்டு கை கழுவுதல், முகத்தை கைகளால் அல்லது கைக்குட்டையால் மூடிக் கொண்டு இருமுதல், தும்முதல் மற்றும் உடல்வலி, இடைவிடாத காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் முறையாக மருத்துவரிடம் காண்பித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு உட்கொள்ளுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாது இருத்தல், கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் காண்பித்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் பொருளாளர் நவரத்தினசாமி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் சுவாமிநாதன் பொதுமக்களுக்கு கை கழுவும் முறைகளை விளக்கி இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் சோப்பு நீரைக் கொண்டு கைகளை சுத்தமாக கழுவினர் இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags : CM ,
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!