×

பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்

போடி, மார்ச் 20: கொரோனா அச்சத்தை தொடர்ந்து தமிழகம்-கேரளம் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது. நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகள் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த 3 நாட்களாக விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பெரும்பான்மையாக நிறுத்தப்படுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் போடி மெட்டு, சாக்குலத்து மெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகியவை கேரளாவை இணைக்கும் பகுதிகளாக உள்ளன. கேரளாவில் கொரோனாவுடன், பறவைக் காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால், இருமாநில எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள் அனைத்து, தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் இங்கும், அங்கும் அனுமதிக்கப்படுகின்றனர். போடி மெட்டு குரங்கணி மலை அடிவாரமான முத்தலில் மருத்துவ குழுவினர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில், டொம்புச்சேரி, போடி நகராட்சி மருத்துவ குழுவினர் இணைந்து, ரளாவிலிருந்து வருகிற வாகனங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், இருமாநில பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளா வாகனங்களில் இருந்து வருபவர்களிடம் ‘இன்ப்ராபெட் மெஷினில் காய்ச்சல் உள்ளதா என டெம்பரேச்சர் பார்க்கின்றனர். வாகன டயர்களில் நாசி கொல்லி மருந்து டயர்களில் அடித்து அனுப்புகின்றனர்.

Tags : Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...