×

மழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி, மார்ச் 20: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை, கடும் வெயிலால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத்துக்கும் பயன்பட்டு வருகிறது. பருவ மழையால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 68.44 அடியாக உயர்ந்தது. பின்னர் அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் முறைப் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு 58ம் கால்வாயின் வழியாகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கமும அதிகமாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

தற்போது அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. நீர்மட்டம் 47.52 அடியாக உள்ளது. அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 15 அடிக்கும் மேல் வண்டல் மண் படிந்து இருக்கிறது. மேலும் தேனி மாவட்டத்தில் கடும் வெயிலின் காரணத்தினாலும், மழை இல்லாத காரணத்தினாலும் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஊசி உண்டு சளி, காய்ச்சல், இருமலால் வரும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊசி போடாமல் மாத்திரை மட்டுமே வழங்குகின்றனர்.

காரணம் கேட்டால் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்கின்றனர். அதேநேரத்தில் பெரும்பாலான டாக்டர்கள் தாங்கள் நடத்தும் தனியார் கிளினிக்குகளில் சளி, காய்ச்சல், இருமலால் வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமலால் கொரோனா பீதியுடன் வருபவர்களுக்கு ஊசி போடுவதற்கு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது