×

சம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் புதிய அரசு மருத்துவமனையும், 2012ல் மருத்துவக் கல்லூரியும் இயங்க தொடங்கியது. இம்மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக 600 பேர் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

தொடக்கத்தில் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் இந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது சுத்தம் செய்யும் பணியுடன், ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு நோயாளிகளை அழைத்து செல்வது, ரத்தம், ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை நிலையத்திற்கு நோயாளிகளை அழைத்து செல்வது, நோயாளிகளை அழைத்து சென்று ரிப்போர்ட் வாங்கி வருவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டீன் ரத்தினவேல் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 11மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...