வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

கெங்கவல்லி, மார்ச் 20:  வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை செயல் அலுவலர்கள் வழங்கினர். கெங்கவல்லி தாலுகாவில் வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தனர்.

அதேபோல், தெடாவூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் சண்முகசுந்தரி மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், வீட்டில் குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அணுக வேண்டும் என்றார்.

Related Stories:

>