×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை

தேன்கனிக்கோட்டை, மார்ச் 20: கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் சுகாதார கண்காணிப்பை பலபடுத்தவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க வேண்டியும் திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கொரோனா வைரசை தடுப்பதற்கு மாநில எல்லைகளில் சுகாதார கண்காணிப்பை பலப்படுத்தி, ஓசூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் தளி பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகியோர் சட்டமன்றத்தில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

இங்குள்ள மக்கள் அன்றாட வேலைகளுக்காகவும், தொழில் நிமித்தமாகவும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ரயில்கள் மூலமாக சென்று வருகின்றனர். ஓசூர் நகரம் மிகப்பெரிய தொழில்நகரமாக விளங்குவதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கவும், எல்லை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags : ward ,Hosur Government Hospital ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி