×

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள்,  18 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மகாராஜகடை அருகே கோதிகுட்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மலர்க்கொடி(39). வடிவேல் டைல்ஸ் ஷோரூமில் பணியாற்றி  வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மலர்க்கொடி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர், மாலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

அதில், வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அதனை வீட்டு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து மலர்க்கொடி மகாராஜகடை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், எஸ்.ஐ. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்வு செய்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூரைச் சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து வந்து கைவரிசை காட்டிச்சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Krishnagiri ,
× RELATED வீட்டை உடைத்து நகை கொள்ளை