×

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம் புதூர் புங்கனை ஊராட்சி புதூர் காமராஜ் நகர், மேலகாப்பட்டி, புங்கனை, ஒப்பாரப்பட்டி, பாண்டவர் நகர், மண்ணாடிப்பட்டி, எம்ஜிஆர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமும், ₹1 கோடி மதிப்பீட்டில் புதூர் முதல் தாமலேரிப்பட்டி வரை தார்சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.

தற்போது, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசு மருத்துவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்,’ என்றார்.இந்த ஆய்வின்போது, ஊத்தங்கரை சேர்மன் உஷாராணி குமரேசன். திமுக ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், கவுன்சிலர்கள் குமரேசன், ஆனந்தி, கோவிந்தசாமி, பிடிஓக்கள் அன்னபூரணி, அசோகன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்