கடத்தூர் பகுதியில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

கடத்தூர், மார்ச் 20: கடத்தூர் பகுதியில் மின்னல் வேகத்தில் இயக்கப்படும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.  கடத்தூர் பகுதியில் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் எம்.சாண்ட் மணல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் சரக்கு வாகனங்கள் எப்போதும் சென்ற வண்ணம் இருக்கும். இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள், மின்னல் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் மின்னல் வேகத்தில் இயக்கப்படும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>