×

கழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்

சிதம்பரம், மார்ச் 20: சிதம்பரம் நகரில் உள்ள 7வது வார்டு காரிய பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் சப்-கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:சிதம்பரம் நகராட்சியில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் உள்ளது. நகராட்சியின் 7வது வார்டில் உள்ள காரிய பெருமாள் கோயில் தெரு மற்றும் சுப்பிரமணியன் தெருவில் பல வீடு
களுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. ஆனால் வரி வசூலிக்க மட்டும் அதிகாரிகள் வருகிறார்கள். காரிய பெருமாள் கோயில் தெருவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக ஆள்தூக்கி கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இதனால் 30 அடி ஆழத்தில் இங்கு கழிவுநீர் தேக்கப்படுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சியின் 20வது வார்டான வஉசி தெருவில் அமைக்கப்பட வேண்டிய இந்த கழிவு நீர் உந்து நிலையம் 7வது வார்டு பகுதியில் அமைந்திருக்கிறது. அதனால் சார் ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட ஆள் தூக்கி கழிவு நீர் உந்து நிலையத்தை பொதுமக்கள் இல்லாத இடத்திற்கு மாற்றிட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட சப்- கலெக்டர் விசு மகாஜன்,  இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : sewage station ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...