×

மேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்பு

புதுச்சேரி, மார்ச் 20: பாகூர் தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு மீது அரசு கொறடா அனந்தராமன் அளித்த கட்சித்தாவல்  தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய புகார் மீது விசாரணை நடந்து  வருகிறது.
கடந்த 16ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் சிவகொழுந்து,  தனவேலு எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அன்றைய தினம் சபாநாயகர்  முன்பு ஆஜரான தனவேலு, தனக்கு வக்கீல்கள் வைத்துக்கொள்ளவும், சாட்சிகளை  குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என கோரினார். மேலும் 2  நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டார்.இதனையடுத்து  மீண்டும் நேரில் ஆஜராக சபாநாயகர் சிவகொழுந்து அறிவுறுத்தியிருந்தார். அதன்படி நேற்று காலை 11.30 மணியளவில் தனவேலு எம்எல்ஏ சட்டமன்றத்துக்கு வந்து  சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்தார். அப்போது, கொரோனா வைரஸ் பரவுவதை  தடுக்கும் வகையில் முக கவசம், கையுறைகள் அணிந்திருந்தார்.சபாநாயகரிடம்  தனது வக்கீல்கள் சென்னையிலிருந்து வரவேண்டியுள்ளது என்றும் கொரோனா வைரஸ்  பரவுவதால் அவர்களால் உடனடியாக வர முடியாததால் 2 வார கால அவகாசம் அளிக்க  வேண்டும் என கேட்டார். இதற்கு சபாநாயகர் சிவகொழுந்து ஆலோசனை செய்து  தெரிவிப்பதாக கூறியுள்ளார்.பின்னர் தனவேலு  கூறுகையில், அரசு கொறடா அனந்தராமன் கொடுத்த புகாரில் நாளிதழ், காங்கிரஸ்  நிர்வாகி ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக தனக்கு  தெரிந்ததாக அவர் கூறவில்லை. இதுபோன்ற விஷயங்கள் கட்சித்தாவல் தடை  சட்டத்தில் இடம்பெறாது. 22 சாட்சிகள் உள்ளதாக கூறுகின்றனர். இவர்களிடம்  குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் என்  வக்கீல்கள் வர முடியவில்லை. எனவே மேலும் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு